computer news

15/07/2010 12:46

உங்கள் தனிநபர் விருப்பங்கள் உங்களுக்கு மட்டும்

என்னதான் இணைய தளங்கள், நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், தனிநபர் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம் என உறுதி அளித்தாலும், சில இணைய தளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில விளம்பர நிறுவனங்களின் புரோகிராம்கள், நம் தனிநபர் விருப்பங்களைத் திருடிக் கொண்டிருக்கலாம். இவற்றை எப்படி அறிவது? இதற்கு இணையத்தில் ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரிhttps://www.privacychoice.org/whos_watching. இந்த தளத்திலிருந்து, நீங்கள் பார்க்கும் இணைய தளங்களில், நீங்கள் அறியாமல் உங்கள் பெர்சனல் தகவல்களைத் திரட்டும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை அறியலாம். இதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை நீங்கள் எடுக்கலாம்.  இந்த தளம் விட்ஜெட் எனப்படும் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் வேவு பார்க்க உதவிடும் தளங்களையும் நீங்கள் புறக்கணிக்கலாம். இந்த தளத்தில் நுழைந்தவுடன் Your Choicesஎன்னும் டேபினைத் திறக்கவும். இங்கு நீங்கள் விலக்க விரும்பும் தளங்கள் வகையினை நிர்ணயம் செய்திடலாம். தேர்ந்தெடுத்த தளங்களை விலக்கி வைக்கலாம். அல்லது இத்தகைய அனைத்து தளங்களையும் விலக்கலாம். இந்த இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை ஏற்றுக் கொள்கையில், மேலும் மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்குத் தரப்படும். அவை Opt out through the Network Advertising Initiative, Optout with the TACO Firefox Addon, மற்றும்  Block Tracking Through your Browser ஆக இருக்கும். இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், இந்த தளத்திலேயே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் உள்ளன. அவற்றைப் படித்துத் தெளிந்து கொள்ளலாம். உங்கள் அந்தரங்கம் புனிதமானது. அது உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்கல்ல.


 

  
படங்களில் எழுத்துக்களைப் பதிக்கலாம்
போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது.  போட்டோ ஷாப் தொகுப்பிற்குப் பதிலாக, அதன் அண்மைக் கால புதிய தொகுப்புகளையும் பயன்படுத்தலாம்.  அத்தொகுப்புகளில் அதற்கான  வழிகளை இங்கு காணலாம்.
படங்கள் அல்லது போட்டோக்களில் சொற்களை அமைக்க நமக்கு கற்பனைத் திறனும், போட்டோஷாப் தொகுப்பும் தான் தேவை. இங்கு எப்படி படங்களில் அவற்றை அமைத்து, நம் கற்பனைத் திறனுக்கு ஒரு வடிவம் கொடுப்பது எனப் பார்க்கலாம்.  இதன் மூலம் படங்களை வாழ்த்து அட்டைகளாகவும், இலச்சினை களாகவும், போஸ்டர்களாகவும், போட்டோக்களை நிறுவனத் தகவல் குறிப்புகளுடன் இணைக்கும் வகையிலும் அமைக்கலாம். எனவே முதலில் இதற்கேற்ற போட்டோக்கள், படங்கள் அல்லது கார்ட்டூன் படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர்1. அடோப் போட்டோஷாப்  அல்லது சார்ந்த தொகுப்பைத் திறக்கவும். பின் அதன் பைல் மெனு வழியாகக் குறிப்பிட்ட பட பைலைத் திறக்கவும். 2. டூல் பாரில் டெக்ஸ்ட் டூலைனித் தேர்ந்தெடுக்கவும். இது மிக எளிது. டூல்பாரில் கூ என்ற எழுத்தின் மீது கிளிக் செய்தால் போதும்.
3. அடுத்து, இந்த டூல்பாரில் கீழாக அமைக்கப்பட்டுள்ள மேல் இரண்டு சதுரங்களில் கிளிக் செய்திடவும். இதில் மேலாக உள்ள சதுரக் கட்டம் முன்புற வண்ணத்தைக் குறிக்கிறது. இது உங்கள் எழுத்தின் வண்ணமாக இருக்கும். படத்தின் வண்ணம், டெக்ஸ்ட் அமைய இருக்கும் இடத்தில் உள்ள வண்ணம் ஆகியவற்றை அனுசரித்து, எழுத்துக்களுக்கான வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக்  செய்திடவும். 
4. படத்தில் எந்த இடத்தில், நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைத்திட வேண்டுமோ, அந்த இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும். 
5. இங்கு எழுத்து வகை, ஸ்டைல், அளவு மற்றும் அலைன்மென்ட் ஆகியவற்றை அதன் பட்டியல்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும். பின்னர் டயலாக் பாக்ஸில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட்டை அமைக்கவும். முழுவதும் டெக்ஸ்ட் அமைத்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 
6. அடுத்து, டெக்ஸ்ட் ஏரியா மீது மவுஸின் இடது பட்டனை அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். டெக்ஸ்ட்டின் சுற்றுப்புற பார்டர் லைன், நகரும் எறும்புகள் போலத் தோற்றமளிக்கும். மவுஸைப் பிடித்தவாறே இந்த டெக்ஸ்ட் கட்டத்தினை நகர்த்தி, விரும்பும் இடத்தில் கொண்டு சென்று வைக்கவும். டெக்ஸ்ட்டில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமானால், கர்சரை நகர்த்தி அமைக்கலாம். முழுவதும் நீக்க வேண்டும் எனில், பைல் மெனுவில் கிளியர் தேர்ந்தெடுத்து என்டர் செய்திடலாம். ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் எனில், அவற்றைத் தேர்ந்தெடுத்து, டெலீட் பட்டன் அழுத்தலாம். 
7.   டெக்ஸ்ட் அமைக்கும் வேலை முடிந்த பின்னர், பைல் மெனுவில் சேவ் அல்லது சேவ் அஸ் தேர்ந்தெடுத்து, புதிய பெயர் கொடுத்து பதிந்து கொள்ளவும். 
சில டிப்ஸ் தரட்டுமா!
முதலில் கூறியபடி, படத்திலிருந்து டெக்ஸ்ட் மாறுபட்டு இருக்கும் வகையில், அதன் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் பின்னணி நிறம் டார்க்காக இருந்தால், மென்மையான வண்ணத்தில் டெக்ஸ்ட்டை அமைக்கவும். மிதமான வண்ணத்தில் படம் இருந்தால், டார்க் கலரில் எழுத்துக்களை அமைக்கவும். 
டெக்ஸ்ட் அமைத்த பின்னர், முற்றிலும் வேறு பெயரில் பட பைலை சேவ் செய்திடவும். இதன் மூலம், ஒரிஜினல் படத்தினை காப்பாற்றி வைத்துக் கொள்ளலாம். 
அடோப் போட்டோஷாப் தொகுப்பு தரும் Vertical Alignment Option –ஐப் பயன்படுத்தி, டெக்ஸ்ட்டை நெட்டு வாக்கில் அமைக்கலாம்.
இணையத்தில் உள்ள கிளிப் ஆர்ட் அல்லது வேறு படங்களைப் பயன்படுத்தி, அதில் டெக்ஸ்ட் இணைத்து, வர்த்தகரீதியாக  அதனைப் பயன்படுத்தத் திட்டமிட்டால், அந்த இணைய தளத்தின் நிர்வாகிக்கு அஞ்சல் அனுப்பி அனுமதியினைப் பெற்றுக் கொள்ளவும்.  போட்டோ ஷாப் அல்லது வேறு பிக்சர் எடிட்டர் தொகுப்பில், டெக்ஸ்ட்டை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி உண்டு; அதனைப் படத்தின் மீது மிதக்க விடலாம். அல்லது ஒரே இடத்தில் நிலைக்க வைக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டுக்கு முப்பரிமாண நிலையையும் தரலாம். 
உங்கள் கற்பனைத் திறனுடன் டெக்ஸ்ட் அமைத்து அவற்றை ரசித்து மகிழுங்கள். உங்களுடைய, அல்லது இல்லத்தில் நடக்க இருக்கும் திருமண அழைப்பிதழைக்கூட, வடிவமைத்து மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைக்கலாம்
 
  
ஸ்பைவேர் - ஆட்வேர் தடுப்பது எப்படி ?
 
பல வாசகர்களைப் பயமுறுத்தும் விஷயங்கள் பட்டியலில், அதிகம் கவலைக்குள்ளாக்குவது ஸ்பைவேர், ஆட்வேர், மால்வேர் எனக் குறிப்பிடப் படும் தொகுப்புகளே.  இவை இன்டர்நெட் வழியாக, கம்ப்யூட்டர் உள்ளே வருவது நிச்சயமாகிவிட்ட ஒரு உண்மையாகும். ஆனால், இவை உள்ளே உள்ளனவா என்று தெரியாமலேயே நாம் இவை குறித்து அச்சம் கொண்டிருப்பது தான், கூடுதல் கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. பல வாசகர் கடிதங்களில் இந்த அச்சம் புலப்படுகிறது. எந்த விஷயமானாலும், இன்டர்நெட் வழி தான் என்று ஆகிவிட்ட நிலையில், இது போன்ற ஆபத்துக் களிலிருந்து கூடுமானவரை பாதுகாப்பதற்குரிய வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அவை குறித்து இங்கு சுருக்கமாகக் காணலாம். 
1. ஸ்பைவேர் தடுப்பு: நீங்கள் ஏற்கனவே இதனைச் செய்திராவிட்டால், உடனே மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு இதுவாகும். உடனடியாக ஸ்பைவேர் தடுப்பு புரோகிராம்   (spyware blocker)  ஒன்றை நிறுவுங்கள். இங்கு குறிப்பிடப்படுவது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அல்ல. ஸ்பைவேர் என்பது வைரஸ் அல்ல. பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், ஸ்பைவேர் புரோகிராம்களைத் தடுப்பதில்லை. எனவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்பைவேர்களைத் தடுக்கும் புரோகிராம்களையும் நாம் இன்ஸ்டால் செய்திட வேண்டும். செக்யூரிட்டி சூட் (Security Suite)  என்று சொல்லபடுகிற தொகுப்புகளில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் மற்றும் பயர்வால் சேர்ந்தே கிடைக்கின்றன. ஆனால் இந்தவகை தொகுப்பு புரோகிராமினால், உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் மெதுவாகிறது என்றால், தனித்தனியே ஒவ்வொரு தடுப்பிற்கும்,தனி புரோகிராமினை நிறுவலாம்.
2. பயர்வால்: மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பயர்வால் தடுப்பு ஒன்றினைத் தருவது ஒரு நல்ல முயற்சியாகும். ஆனால், கூடுதல் வசதிகள் கொண்ட, சிறப்பாகச் செயல்படும் பயர் வால்கள் சில உள்ளன.  அவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு பயர்வால், உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்கள் அனுமதி இன்றி, அல்லது உங்களுக்குத் தெரியாமலேயே நுழையும் எதனையும், அது ஸ்பைவேர், வைரஸ், மால்வேர், ஹேக்கர் போன்ற எதுவாக இருந்தாலும், அவற்றைத் தடுக்கிறது. பயர்வால் செட்டிங்ஸ் சில வேளைகளில் குழப்புவது போல் இருக்கும். எனவே தெளிவடைந்த பின்னரே, அதனை அமைத்துப் பயன்படுத்த வேண்டும். பயர்வால் அமைத்த பின்னர், அவை சரியாக உள்ளனவா என்று அறிய நீங்கள் Hackerwatch.org/ Malwarehelp.org என்ற இரண்டு தளங்களின் உதவியை நாடலாம். 
3. அப்டேட், அப்டேட்: உங்களுடைய செக்யூரிட்டி சாப்ட்வேர் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டால் தான், திடீர் திடீரென உருவாக்கப்பட்டு வரும் கெடுதல் அளிக்கும் புரோகிராம்களைத் தடுக்கலாம். விண்டோஸ் அப்டேட்ஸ், செக்யூரிட்டி அப்டேட்ஸ், பேட்ச்சஸ், டெபனிஷன்ஸ், உங்களுடைய பயர்வால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் ஆகிய அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும்.
4. பாதுகாப்பான இன்டர்நெட் பயணம்: இன்டர்நெட் பிரவுஸ் செய்வது, இப்போதெல்லாம் ஊர்ந்து, பறந்து, பாய்ந்து செல்லும் ஜீவராசிகள் வாழும் காட்டின் நடுவே  நடந்து செல்வது போல ஆகிவிட்டது. எந்த நேரத்தில் எந்த வைரஸ் அல்லது மால்வேர் வந்து நம்மைத் தாக்கும் என்று நமக்குத் தெரியாது. சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நாம் இவற்றைத் தடுக்கலாம். இணைய தளங்களில் எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திட வேண்டாம். 25 நாளில் 25 கிலோ எடை குறைய, இங்கே கிளிக் செய்திடுக என்று உங்களைத் தூண்டும் வாசகம் இருக்கும். அதிலிருந்து ஓடிவிடுங்கள். பிரபலமான சினிமா நடிகை குறித்த சுவராஸ்யமான தகவல் குறித்து அறிவிப்பு இருக்கும். அலட்சியப்படுத்துங்கள். பாப் அப் விண்டோ எழுந்து வருகிறதா? அதில் இது போன்ற செய்தி உள்ளது. உடனே அதில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து, அதனை மூட முயற்சிக்காதீர்கள். அதில் கிளிக் செய்தால் கூட, அது ஆக்டோபஸ் போல உங்களை இழுத்துக் கொண்டு நாசப்படுத்தும். அதுதானே அப்போதைக்கு ஆக்டிவ் விண்டோ. எனவே ஆல்ட்+ எப்4 அழுத்துங்கள். அது உடனே மூடப்படும். 
இதே போலத்தான் இமெயில் செய்திகள் கொண்டு வரும் லிங்க்குகளும். எதனையும் தொட வேண்டாம். அதில் உங்கள் கர்சரைக் கொண்டு சென்றாலே, அது உங்களை இழுத்துச் செல்ல இருக்கும் தளத்தின் முகவரி காட்டப்படும். அதனைப் பார்த்தே, அந்த தளம் உண்மையானதா என்று தெரியவரும். 
5. புரோகிராம் இன்ஸ்டலேஷன்: பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் குறித்துத் தெரிந்து கொண்டு, அவற்றை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்கிறோம். அவற்றை இன்ஸ்டால் செய்திடும் முன், அதில் தரப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் படித்துவிடுங்கள். சில சிறிய அளவான எழுத்துக்களில், உங்கள்  பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்கான தகவல் இருக்கும். 
6. யூசர் ஐ.டி. திருட்டு: நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுவது, இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே யூசர் நேம் கூடுமானவரை குழப்பமானதாகவே இருக்கட்டும். அதே போல பாஸ்வேர்டுகளும், யாரும் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கட்டும். 
நல்ல ஸ்பைவேர் தடுக்கும் புரோகிராம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், சரியான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட், அடிக்கடி அப்டேட்டிங் ஆகிய வற்றைக் கடைப்பிடித்தால், நம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பாதுகாப்பானது என்ற நல்ல நம்பிக்கையுடன் செயல்படலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share |